Tuesday, September 4, 2018

ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன மலர் டீச்சர்

பிரேமம் படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். 

தமிழில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் என்ஜிகே படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும் , தனுஷுடன் மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் சாய் பல்லவியை, டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சாய் அவர், தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


SHARE:

0 comments: