Tuesday, September 25, 2018

கொலை அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை - சவால் விடுக்கும் கோட்டா

கொலை அச்சுறுத்தல்களுக்கு தான் ஒருபோதும் அஞ்சவில்லை என்றும் தனக்கு யாரும் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஹங்வெல்லயில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ஊடகவியலாளர்கள் இதுதொடர்பில் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தபோதே கோட்டா மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

கொலை அச்சுறுத்தல் தொடர்பில் அச்சமடையவில்லையென குறிப்பிட்ட கோட்டா, யுத்த காலத்தில் விடுதலை புலிகள் தன்னை கொலை செய்வதற்கு முயற்சித்ததாகவும் எனினும் அதிலிருந்தே தப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஆகையால் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதாக உணர்வதாகவும், இதனால் பாதுகாப்பை அதிகரிக்குமாறு எந்தவித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை என்றும் கோட்டா மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பே போதுமானதாக உள்ளதென கோட்டா மேலும் தெரிவித்தார்.
SHARE:

0 comments: