Monday, September 17, 2018

சென்னையில் பெரியார் சிலைகளுக்குக் காவல்துறை பாதுகாப்பு

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை அடுத்துச் சென்னையில் உள்ள பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்புக்காகக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலையின் மீது காலணிகளை வைத்து அவமரியாதை செய்யப்பட்டது. இதே போல் சென்னையிலும் பெரியார் சிலை மீது கால வீசப்பட்டது.

இந்நிலையில் மேலும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் சென்னை சிம்சன், வேப்பேரி, அண்ணா மேம்பாலம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்புக்காகக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
SHARE:

0 comments: