Wednesday, September 5, 2018

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் மரண தண்டனை!- ஜனாதிபதி அதிரடி

அரச சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

பாரியளவில் மக்களை திரட்டி ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று போராட்டம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அதிரடி கருத்து வெளியாகியுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அண்மையில் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். 

அதற்கு பல எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வெளியாகியிருந்த போதிலும், தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது தனது தீர்மானத்தில் ஜனாதிபதி உறுதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: