Tuesday, September 25, 2018

சிறையிலிருந்து விடுவிக்கப்படும் பயங்கரவாதிகளால் தொடரும் அச்சுறுத்தல்....!

குறைந்த அளவான தண்டனைக்கு காலத்தை அனுபவிக்கும் பயங்கரவாத செயல்களோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். எனினும் அவர்களினால் நாட்டுக்கு பெரும் பாதகமான விளைவுகள் ஏற்படுமென புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இத்தகைய குற்றவாளிகளை சிறைச்சாலைகளில் வைத்து கண்காணிப்பதற்குப் போதுமான சிறைச்சாலை பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். வெளியில் வருகின்ற இவர்கள் சர்வதேச நாசகார வலைப்பின்னலோடு தொடர்புகளை ஏற்படுத்தி தொடர்ந்தும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என பிரித்தானியாவின் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் இயன் அச்செசன் தெரிவித்துள்ளார்.

போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாகவும் சிறைச்சாலைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2014 இல் குற்றவாளிகளை கண்காணிக்கும் அமைப்புகளின் ஒருபகுதி தனியார்மயப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்படும் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிறைச்சாலைகளில் தீவிரவாதம் தொடர்பான சிந்தனைகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான சகல முயற்சிகளும் தம்மால் முன்னெடுத்து வரப்படுவதாக தெரிவித்தார்.
SHARE:

0 comments: