Tuesday, September 25, 2018

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கும் வாசு

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அரசியல் கைதிகளில் தண்டனை அனுபவித்து கொண்டிருப்பவர்களுக்கும், இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்போது அவர்கள் தொடர்பில் தேடிப்பாரக்கும் பொறுப்பை பொலிஸாருக்கு வழங்க வேண்டும்.

அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வந்து தங்களை உறுத்திப்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம்.

எனினும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது.

வழக்கு விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: