Tuesday, September 4, 2018

கொழும்பில் திடீரென ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிப்பு...!

கொழும்பில் நாளை பாரிய போராட்டம் ஒன்றினை கூட்டு எதிரணியினர் முன்னெடுக்கவுள்ள நிலையில், இன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஆயிரக்கணக்கில் கொழும்பில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நாளை கூட்டு எதிரணியினரால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் சுமார் 5 இலட்சத்துக்கும் மேலதிகமானோர் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துவார்கள் என கூட்டு எதிர் தரப்பினரால் கூறப்பட்டது.

இந்நிலையில், சுமார் ஆயிரக்கணக்கான பொலிஸார் இன்றுமுதல் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்த்க்கது.


SHARE:

0 comments: