Tuesday, September 11, 2018

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் முதல் சதம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷப் பந்த் சிக்ஸ் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5 வைத்து டெஸ்ட் போட்டியில் இந்தியா அணிக்கு 464 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது.

அதன் பிரகாரம் இமாலய இலக்கை விரட்டி களம் இறங்கிய இந்தியா தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

இதன் பின்னர் ரகானே 37 ஓட்டங்களுடனும் அடுத்து வந்த விஹாரி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியிறினார்.

இருப்பினும் தற்போது வரை இந்தியா அணி 6 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் ரிஷப் பந்த் 113 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

SHARE:

0 comments: