Tuesday, September 18, 2018

நித்யா நந்தா-வாக களமிறங்கும் G.V.பிரகாஷ்-ன் புதிய படம்...!

மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் இளைஞர்களை கதரவிடும் ‘காதலை தேடி நித்யா நந்தா’....! 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த படம் திரிஷா இல்லனா நயந்தாரா. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஒருபுறம் இளைஞர்கள் கொண்டாட, பெரியவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார் ஆதிக். 

இந்நிலையில் இவர் மீண்டும் ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் சோனியா அகர்வால், அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இதனை ‘விஷன் ஐ மீடியாஸ்’ நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘காதலை தேடி நித்யா நந்தா’ என்று ப்ர்ய்ற வைத்துள்ளனர். இதை ஜி.வி.பிரகாஷ்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் "யெஸ் வீ ஆர் பேக்" என்று பதிவிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்

இந்தப்படமும், திரிஷா இல்லனா நயந்தாரா-வின் ‘ஏ பிட்டு படம் டி’ போல நல்ல வரவேற்ப்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
SHARE:

0 comments: