Wednesday, September 12, 2018

அழைப்பு விடுத்திருந்தேன் ஆனால் என்னை சந்திப்பதற்கு பிரபாகரன் விரும்பவில்லை – மஹிந்த

விடுதலை புலிகளின் தலைவரை சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு சமாதானத் தூதுவர்களை அனுப்பியிருந்தேன்.

அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை. நானே கிளிநொச்சிக்கு வந்து அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என மஹிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: