Wednesday, September 19, 2018

யாழ் சாவகச்சேரியில் கோர விபத்து -சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி

யாழ்ப்பணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய மீசாலை வடைக்கு சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நவநீதராஜா வரதன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ் - கண்டி வீதியில் சாவகச்சேரி மடத்தடி பகுதியில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணியளவில் யாழ்.நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் இளைஞன் பயணித்த மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போதே குறித்த இளைஞர் உயிரிழந்தார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE:

0 comments: