Monday, September 24, 2018

சீனாவுடனான வர்த்தகப் போரில் நாங்களே வெற்றிப்பெறுவோம் - அமெரிக்கா

சீனாவுடனான வர்த்தகப் போரில் தாங்களே வெற்றிப்பெறப் போவதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகப்படுத்தியது. அதற்கு பதிலடியாக சீனாவும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்ததால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் உருவானது.

இதையடுத்து, சீனாவும், அமெரிக்காவும் மாறி மாறி வரி விதித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வர்த்தகப் போரில் தாங்களே வெற்றிபெறப் போவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சீனாவின் செயலால் தங்களுக்கு நன்மை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ள அவர், சீனா வெளிப்படைத் தன்மையுடனும், சட்டத்தை மதித்தும் நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

அறிவுச் சொத்தை யாரும் திருட முடியாது என்று தெரிவித்துள்ள மைக் பாம்பியோ, சீனாவுக்கு பதிலடி கொடுப்பதை, அதிபர் டிரம்ப் மிகவும் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
SHARE:

0 comments: