Monday, September 17, 2018

மேற்குலக நாடுகளுடனான முறுகலுக்கு மத்தியிலும் ரஷ்யா இரசாயன தாக்குதல்

ரஷ்ய இராணுவம் வொஸ்டாக்-2018 முக்கிய இராணுவப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக இரசாயன தாக்குதல் பயிற்சியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தியுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள காணொளியொன்றில், படைவீரர் ஒருவர் இரசாயன பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகமூடியை அணிந்த வண்ணம் உள்ளார். 

அவர் இரசாயன தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கவச வாகனங்களை சுத்திரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை அந்த காணொளியில் சித்தரிக்கப்படுகின்றது.

சோவியற் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதன் பின்னர் ரஷ்யாவின் மிகப் பெரிய ராணுவ பயிற்சி நடவடிக்கையாக வொஸ்டோக் – 2018 (கிழக்கு – 2018) திகழ்கின்றது. இந்த பயிற்சி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமையுடன் நிறைவுக்கு வருகின்றன.

சீனாவி எல்லைப் பகுதியான கிழக்கு சேர்பியாவில் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளின் போது சுமார் 3 லட்சம் ரஷ்ய துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முறுகல் நிலை வலுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுத்த விமானங்கள் 36 ஆயிரம் தாங்கிகள் என்பன இராணுவ பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: