Thursday, September 20, 2018

நீங்க பாத்தீங்களா? அவெஞ்சர்ஸை மீட்க வரும் கேப்டன் மார்வெல் தமிழ் Trailer!

கேப்டன் மார்வெல் படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகி உலகம் முழுக்க வைரலாகி வருகிறது....! 

மார்வெல் காமிக்சின் மிக முக்கிய பெண் கதாபாத்திரம் கேப்டன் மார்வெல். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் மாயமான சூப்பர் ஹீரோக்களை மீட்டெடுக்க வருவது இவர்தான். ஏற்கனவே Marvel Studios தயாரிப்பில் இறுதியாக வெளியான Ant man and the wasp திரைப்படத்தின் க்ளைமேக்சில் காணாமல் போன அவெஞ்சர்ஸ் வீரர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள், ஆனால் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதைப் போன்ற க்ளூ கொடுத்திருந்தார்கள். 

இதையடுத்து தற்போது கேப்டன் மார்வெல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இதற்கு அடுத்த மாதம் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரின் இறுதி பாகம் வெளியாகவுள்ளது. எனவே கண்டிப்பாக அவெஞ்சர்ஸை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பது குறித்து இந்த படத்தில் காட்டுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் நேற்று கேப்டன் மார்வெல் படத்தின் டீசர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகி உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. இதோ தமிழ் டீசர் கீழே இணைக்கப்பட்டுள்ளது..!




SHARE:

0 comments: