Friday, October 19, 2018

14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 14 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்றுவரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றிவரும் பெரியநீலாவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவதினமான நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றுள்ளதுடன் சிறுமி அம்மம்மாவுடன் வாழ்ந்துவருகின்றார்.

இந்த நிலையில்குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

மேலும் பாடசாலையில் சனி, ஞாயிறுகிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின்போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டுவந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

அதேவேளை இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE:

0 comments: