Thursday, October 25, 2018

18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததே: தமிழிசை சௌந்தர்ராஜன்

சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கானது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பாகவே தெரிகிறது என, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியானதை தொடர்ந்து ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஏற்கனவே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்திரா பானர்ஜியும் இதே தீர்ப்பை தான் முன்வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது நீதிபதியும் அதே தீர்ப்பை தான் முன்வைத்துள்ளார் என்றார்.

இதேவேளை, இனி எந்த விதத்திலும் இந்த 18 பேரை வைத்து ஒரு ஆட்சியை நிலைகுழைய செய்யும் செயற்பாடுகள் இடம்பெறாது என தமிழிசை கூறியுள்ளார்.

எனினும் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் நீதிபதி சத்தியநாராயணன் கூறியதாவது, இது முன்னைய நீதிபதிகளின் கருத்தோடு எந்த விதத்திலும் ஒத்ததல்ல. என்னுடைய தனிப்பட்ட தீர்ப்பாகவே இதை பிறப்பிக்கிறேன எனக் கூறிய பின்னரே நீதிபதி தீர்ப்பை வாசித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
SHARE:

0 comments: