Sunday, October 28, 2018

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை முடங்கியது கொழும்பு - பெற்றோலும் இல்லை!

தெமடகொட பெற்றோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்து அதன் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில் மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணத்துங்க இன்று பிற்பகல் பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் செல்ல முயற்சித்த போது பணியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

அதனை தொடர்ந்து, அர்ஜுன ரனத்துங்கவின் மெய்பாதுகாவலர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இதனால் கொழும்பில் உள்ள அனைத்து பெற்றோல் நிலையங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
SHARE:

0 comments: