Thursday, October 25, 2018

சொத்துத் தகராறு காரணமாக பெண்ணை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்து பழிதீர்த்த பாதகன்!

சொத்துத் தகராறு காரணமாக உறவுக்கார பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்து கொடூரமாகத் தாக்கிய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேற்கு வங்காள மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே காணி தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

குறித்த சம்பவம் நடந்த அன்று இப்பிரச்சினை குறித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு என உறவினர் அழைத்ததாக இப்பெண் சென்றுள்ளார்.

இதன்போது உறவினர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இரும்பு கம்பியால் தாக்கி கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், பெண்ணை துஷ்பிரயோகம் செய்த உறவினரையும், அவருக்கு உதவியாக இருந்த ஒருவரையும் கைதுசெய்தனர்.

டெல்லியில் இளம்பெண் நிர்பயாவுக்கு நடந்ததுபோல அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE:

0 comments: