Monday, October 29, 2018

பிரதமராக மகிந்த சற்று முன்னர் பதவிகளை பொறுப்பேற்றார்!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

அவருக்கான பதவியேற்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மேற்கொண்டார்.

இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான முடிவை, ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எடுத்து, அது தொடர்பான அறிவிப்பை, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியுள்ளது என்ற தகவலை, அமைச்சர் மஹிந்த அமரவீர வெளிப்படுத்திய பின்னர், இப்பதவியேற்புத் தொடர்பான தகவலும் வெளியானது.

எனினும், இப்பதவியேற்பு, சட்டத்துக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டதா என்பது தொடர்பில், தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.
SHARE:

0 comments: