Sunday, October 28, 2018

சட்டபூர்வமான செயல்பாடுகளை செய்ய அனுமதிக்க வேண்டும் - சம்பந்தன்

பாராளுமன்றத்தை உடன் கூட்டி சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதோடு, சட்டபூர்வமான செயல்பாடுகளைச் செய்வதற்கு முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூர்யவிற்கு குறித்த விடயம் தொடர்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
"அரசியலமைப்பு சட்டத்தின் மேலாண்மையைக் கருத்திற்கொண்டும் மக்களால் ஜனநாயக ரீதியில்தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் மேன்மையைக் கருத்திற்கொண்டும் சபாநாயகராகிய உங்களை சட்டத்தின்பிரகாரம் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறுகோருகிறேன்"

SHARE:

0 comments: