Sunday, October 28, 2018

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான முக்கிய சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரி அழைப்பு!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் நெருக்கடி தொடர்பில் அவர் இந்த சந்திப்பை நடத்தவுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பு நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: