Saturday, October 20, 2018

இன்விக்டஸ் விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்த இளவரசர் ஹரி!

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது பாரியார் மேகன் மேர்க்கல் ஆகியோர் சிட்னி – ஒபேரா இல்லம் அமைந்துள்ள துறைமுக நகரில் இன்விக்டஸ் 2018 விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகும் குறித்த போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

சேவையின் போது ஊனமுற்ற படையினருக்கு கௌரவம் வழங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த நிகழ்வை நிவ் சவுத் வேல்ஸின் முதல் மந்திரி க்ளேடிஸ் பெரெஜிகிலியன் தலைமையேற்று நடத்துகிறார்.

எனினும், இந்த நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக சற்று தாமதமாகியே ஆரம்பித்தது. முன்னதாக இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் ஆகியோர். அவுஸ்ரேலிய மற்றும் நியுஸிலாந்து போர் நாயகர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

அதனையடுத்து அங்கு கூடியிருந்த பிரமுகர்களுடன் அரச தம்பதிகள் அலவலாவி மகிழ்ந்தனர். இதுதவிர, கொக்காடு தீவில் இடம்பெற்ற முதலாவது இன்விக்டஸ் விளையாட்டு நிகழ்விலும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இளவரசர் ஹரியினால் நிறுவப்பட்ட விளையாட்டு அமைப்புகளின் ஊடாக, மோதல்களின் போது காயமடைந்த இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச பாராலிம்பிக்-பாணியில் நடத்தப்படும் நிகழ்வாக இது திகழ்கிறது.
SHARE:

0 comments: