Monday, October 29, 2018

ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையகத்தில் குண்டுவெடிப்பு! – 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் காபுல் நகரத்திலுள்ள தேர்தல் ஆணையகத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காபுல் நகர சுயேட்சை தேர்தல் ஆணையகத்தில் இன்று (திங்கட்கிழமை) குண்டுத்தாக்குதல் சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

இதில், 4 சுயேட்சை தேர்தல் ஆணையக அதிகாரிகளும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சரின் பேச்சாளர் நஜீப் தனீஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற மாகாணத்தேர்தலின் வாக்குகளைக் கணக்கிடும் பணியில் ஏற்கனவே தாமதித்துள்ள தேர்தல் ஆணையகத்தின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: