Thursday, October 25, 2018

அக்ரஹார சிறையில் கன்னட மொழி கற்றுக் கொள்ளும் சசிகலா!

முன்னாள் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உள்ள பள்ளியில் கன்னட மொழி கற்றுக் கொண்டு வருவதாக சிறை அதிகாரி ஒருவர் பி.டி..ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“சசிகலா இப்போதைக்கு கன்னட எழுத்துக்களை பயின்றுள்லார், இன்னும் உயர்மட்ட கன்னட மொழியைக் கற்க அவர் விண்ணப்பிக்கலாம்.

இப்போது கொஞ்சம் கன்னட மொழியைக் கற்றுள்ளார். அத்துடன் அவரால் கொஞ்சம் கன்னடம் பேச முடியும்” என சிறை அதிகாரிதெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மூத்த பெங்களுர் பல்கலைக் கழக அதிகாரியான டாக்டர் பி.சி.மைலார்ப்பா என்பவர் கூறும்போது,

“உயர்மட்ட கன்னட மொழியைக் கற்றுக் கொள்ள சசிகலாவிடமிருந்து சிறையிலிருந்து விண்ணப்பம் வரப்பெற்றோம். இது ஒரு ஒராண்டுக்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் படிப்பு ஆகும். இந்தப் பாடம் விரைவில் தொடங்கவுள்ளதோடு, முடிந்த பிறகு தேர்வுகள் நடைபெறும்” என்றார்.

இதற்கான வகுப்புகள் சிறை வளாகத்திலேயே நடைபெறும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
SHARE:

0 comments: