Friday, October 19, 2018

கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது

மலேசியவின் லங்காவி தீவில் கணவனைக் கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில் பிரித்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன் வில்லியம் ஜோன்ஸ் என்பவரின் சடலம் வியாழக்கிழமை அதிகாலை அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் அவரது மனைவியான 62 வயது சமந்தா ஜோன்ஸ் என்ற பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியர்களான இவர்கள் இருவரும் கடந்த பத்து ஆண்டுகளாக மலேசியத் தீவான லங்காவியில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள பிரித்தானிய அதிகாரிகள் மலேசிய அதிகாரிகளோடு தொடர்பில் உள்ளதாகவும் இறந்தவரின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுமெனவும் என பிரித்தானிய வெளியுறவுத்திணைக்கள செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்
SHARE:

0 comments: