Friday, October 19, 2018

சர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலாவிற்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சை கருத்தை தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது, குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு மன்றில் தெரிவித்தது.

அதன்படி வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் டிசம்பர் 7 ஆம் திகதியன்று முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரன் கடந்த 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: