Friday, October 19, 2018

இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு!

இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ள உஸ்மன் கவாஜா, இந்தியாவுக்கு எதிரான மிக முக்கியமான தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் குறைந்தது 8 வாரங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படும் என்பதாலேயே இந்திய தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கெனவெ டேவிட் வோர்னர், ஸ்மித், ஆகியோரை இழந்த அவுஸ்ரேலிய அணி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் சமநிலையில் முடிவடைய காரணமாக இருந்த உஸ்மன் கவாஜாவையும் இழந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த 2 ஆவது டெஸ்ட் போடியின் 2 ஆவது இன்னிங்சில் காயம் காரணமாக உஸ்மன் கவாஜா களமிறங்கவில்லை.

மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய உஸ்மன் கவாஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த காயம் மீண்டும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதால் அவர் கடும் சோகத்தில் இருப்பதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
SHARE:

0 comments: