Wednesday, October 10, 2018

பாலியல் சர்ச்சையில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க: விமான பணிப்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரை மேற்கோள்காட்டி இன்று (புதன்கிழமை) இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி பயணம் மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அந்தப் பெண் முகநூலில் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்.

அப்போது, இலங்கை வீரர்களிடம் ஓட்டோகிராப் வாங்கத் தனது தோழிகளுடன் சென்றபோது, ரணதுங்க தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்.

அப்போது அவர் என்னை மிரட்டியும், தாக்கியும் என்னை பலவந்தப்படுத்தினார். ஆனால், அங்கிருந்து நான் தப்பிவந்து ஹொட்டலில் உள்ள வரவேற்பறை பணியாளர்களிடம் இந்த விபரத்தைத் தெரிவித்தேன்.

ஆனால், அந்தப் பணியாளர்கள், உன்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்” என்று அந்தப் பெண் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பெண் முகநூலில் பதிவிட்ட பதிவு வருமாறு,

SHARE:

0 comments: