Friday, October 19, 2018

ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் தற்போது பெண்களை வெளிநாட்டுக்கு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுப்பது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.

இதன் காரணமாக பெண்கள் காதலிக்கின்றாரோ இல்லையோ, அல்லது அவருக்கு இஷ்டமா என்று கூட கேட்காமல் திருமணம் செய்து வைக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழில் ஒரு வர்த்தகர், தனது பிள்ளையின் காதலனுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்துவிட்டு மகளை மறந்துவிடும்படி சினிமா பாணியில் கூறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் உள்ள பிரபல வர்த்தகரின் மகள் குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைப் பொருள் ஒன்றின் முகவராக தொழிற்படும் இளைஞனுடன் ஓட்டம் பிடித்தார்.

குறித்த மகளை லண்டன் மாப்பிளைக்கு திருமணம் முடித்துக் கொடுப்பதற்கு ஆயத்தமான நிலையிலேயே வர்த்தகரின் மகள் இளைஞனுடன் தலைமறைவாகினார்.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் எடுத்த கடும் முயற்சியின் பயனாக இளைஞனும் மகளும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் குறித்த இளைஞனுடன் நடந்த பேரம் பேசலில் மகளுக்குப் பதிலாக ஒரு கோடி ரூபாய் பணம் குறித்த இளைஞனுக்கு வர்த்தகரால் வழக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
SHARE:

0 comments: