மீண்டும் அணிக்குள் இணையும் டு பிளெசிஸ்: தென் ஆபிரிக்க அணிக்கு மேலும் பலம்!

காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியிருந்த டு பிளெசிஸ் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் 6 ஆம் திகதி சிம்பாவே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலது தோள்பட்டை காயம் காரணமாக கடந்த போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டு பிளெசிஸ் அந்த காயத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும், அடுத்த போட்டியில் விளையாடும் உடற் தகுதியுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிம்பாவே அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தென் ஆபிரிக்க அணியானது 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மீண்டும் டு பிளெசிஸ் அணிக்கும் திரும்புவதானது அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments