Saturday, October 20, 2018

மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட இந்திய அணியில், முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

அண்மையில், டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரிஷப் பந்த் இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டில் சதம், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை 90 ஓட்டங்களுக்கு மேல் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார்.

தற்போது, இந்தியக் கிரிக்கெட் சபை, அறிவித்துள்ள 12 பேர் கொண்ட அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார். இதில், நிச்சயம் பந்துவீச்சாளர் யாரேனும் ஒருவரே நீக்கப்பட இருப்பதால் ரிஷப் பந்த் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

எனினும், டோனி தான் விக்கெட் காப்பாளர் பணியை தொடருவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வரிசையில் முதல் 4 துடுப்பாட்ட வீரர்களுக்கான இடத்துக்கு ரோஹித், தவான், கோஹ்லி, ராயுடு ஆகியோர் இருக்கின்றனர். அதனால் இவர் 5ஆவது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை 5ஆவது வீரராக டோனி களமிறங்கினால், இவரை 6ஆவது வீரராக களமிறக்கி ஃபினிஷிங்குக்கு தயார்படுத்தப்படலாம்

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், எம்எஸ் டோனி (விக்கெட் காப்பாளர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி, சையத் கலீல் அஹமட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) குவாஹத்தியில் நடைபெறவுள்ளது.
SHARE:

0 comments: