Thursday, October 11, 2018

லசித் மாலிங்க இப்படிப்பட்டவரா? பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

டுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான லசித் மலிங்க மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இதுகுறித்து, லசித் மலிங்காவால் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை என்று சின்மயி தனது பதிவில் கூறியிருப்பதாவது,

“சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பையில் இருந்த போது,  நான் தங்கியிருந்த ஹோட்டலில் என் நண்பியும் இருந்தாள். அது ஐ.பி.எல் கிரிக்கெட் சீசனாகும்.

மிகவும் பிரபலமான ஸஇலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவை சந்தித்தேன், என் நண்பியை தேடிச் சென்ற வேளையில் அவரும் ஹோட்டலில்  இருந்தார்.

அவர் என் நண்பி அந்த அறையில் இருக்கிறாள் என்றார். பின்னர் நான் அறையில் சென்று பார்த்த போது அவள் அங்கு இல்லை. உடனே அவர் என்னை கட்டிலின் மேல் தள்ளிவிட்டு என் முகத்தை நோக்கி நகர்ந்து வந்தார்.

அந்நேரத்தில் நான் மிகவும் உயரமானவள் அவரின் வாட்டசாட்டத்திற்கு ஏற்றாற் போல் நான் இருந்ததால் என்னால் அவரை எதிர்கொள்ள முடியவில்லை. நான் சடுதியாக என் கண்கள் மற்றும் வாயை மூடிக்கொண்டேன். ஆனால் என் முகத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார்.

பின்னர் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கதவை தட்டினார். இதுதான் சமயம் என்று ஹோட்டல் குளியலறைக்கு சென்று முகத்தை கழுவி விட்டு சுத்தம் செய்ய வந்த ஊழியருடனேயே அவ்விடத்தை விட்டு ஓடினேன்.

சிலர் என்னை பற்றி இப்படியும் யோசிக்கலாம். நான் ஏன் அவர் கூறினார் என்று உள்ளே சென்றேன். இதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம்" என தெரிவித்துள்ளார்.

இதே போல நேற்றும் இந்திய விமான பணிப்பெண் ஒருவர் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுனன் ரணதுங்க மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE:

0 comments: