Saturday, October 20, 2018

இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து!

இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி18 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) அரம்பமானது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தங்கியிருந்தனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது.

இதில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய நிரோஷன் டிக்வெல்ல 52, டசுன் சனக 66, திசார பெரேரா 44, அகில தனஞ்சய அட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை பெற்றனர்.

இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் மோஹின் அலி 2, அடில் ரஷீத், கிர்ஸ் வோக்ஸ் மற்றும் டொம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் 274 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 27 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்ற போது மழை குறுக்கிட்டது.

இதன் பின்னர் டக்வத் லூவிஸ் முறைப்படி 18 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவ்வணி சார்பில் ஜேசன் றோய் 45, ஜோய் ரூட் 32, இவன் மோர்கன் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்களை வீழ்த்தினார். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது, 2 ஆவது போட்டியும் 31 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

பின்னர் 3 ஆவது போட்டியையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றிய நிலையில் தொடரை 3-0 என இங்கிலாந்து அணி கைப்பற்றி இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
SHARE:

0 comments: