Saturday, October 20, 2018

பயங்கரவாத செயற்பாடு: ஆஸி. வீரரின் சகோதரருக்கு தொடர்பு?

அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞருடன் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரனும் தொடர்பு பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன் அவர் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து ஓகஸ்ட் மதம் 30 ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்று பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் மல்கம் டர்ன்பல் மற்றும் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் ஆகியோரையே கொலை செய்ய திட்டம் தீட்டியமை குறித்த குறிப்பேட்டின் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில், அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஷ்மன் கவாயாவின் சகோதரருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
SHARE:

0 comments: