Wednesday, October 31, 2018

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவரால் தொடரும் பதற்றம்!

இரு வேறு வெளியாட்கள் அலரிமாளிகைக்குள் நுழைந்தமையால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அலரிமளிகைக்குள், இன்று (புதன்கிழமை) மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இருவர் நுழைந்தமையாலேயே இந்த பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அரசியலமைப்பின் படி தானே பிரதமர் என கூறி அலரிமாளிகையில் இருந்து வெளியேறாமல் இருக்கின்றார்.

இந்நிலையில் அங்கு வந்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்கள், அலரிமாளிகையில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யவும், அதனை அகற்றவும் முற்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் அவர்கள் அலரிமளிகையை விட்டு வெளியேறியதாகவும், இதனால் தற்போது அங்கு சுமூகமான நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார். 
SHARE:

0 comments: