Monday, October 29, 2018

அரசியலில் நெருக்கடி - கட்சிகளின் உறுப்பினர்கள் நிலவரம்!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து இலங்கை அரசியலில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி என உறுப்பினர்கள் கட்சி தாவல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போதைய கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கலாம்,

சற்று முன்னர் மஹிந்தவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த வடிவேல் சுரேஷ் மீண்டும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவி இருக்கின்றார். இதனால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 102 ஆக உள்ளது.

அதேநேரம் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இணைவில் மஹிந்த மற்றும் மைத்திரிக்கு ஆதரவாக 100 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆனால் 16 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு நபருக்கோ ஆதரவு தெரிவிக்காமல் இருக்கின்றது.

அதேவேளை 6 உறுப்பினர்களை கொண்ட மக்கள் விடுதலை முன்னணியும் எவருக்கும் ஆதரவு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே எதிர்வரும் 16 ஆம் திகதி நாடாளுமன்றில் பெருமபாணமையை நிரூபிக்கவேண்டிய சூழ்நிலையில், இரு கட்சிகளும் உள்ளன. ஏற்கனவே ஜே.வி.பி. தனது முடிவில் மாற்றம் இல்லை என கூறிவருகின்றது.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குமோ அந்த கட்சியே வெற்றிபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: