இந்தோனேசியாவில் மேலும் ஐந்தாயிரம் பேரை காணவில்லை – நிறைவுக்கு வரும் மீட்பு பணிகள்!

இந்தோனேசியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இருந்து தற்போது வரை 1,763 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்புத்துறை செய்தி தொடர்பாளர் Sutopo Purwo Nugroho இன்று (ஞாயிறுக்கிழமை) அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29 ஆம் திகதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஹோட்டல்கள், வழிபட்டு ஸ்தலங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து இராணுவமும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் நேற்று மட்டும் மேற்கொண்ட தேடுதலில் 34 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இன்று எவ்வித உடல்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் மீட்பு பணியாளர்கள் திரும்பியுள்ளனர்.

மேலும் மீட்பு பணிகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி (வியாழக்கிழமை) முடிவுக்கு வரும் எனவும் பேரிடர் மீட்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments