Wednesday, October 17, 2018

இங்கிலாந்துக்கு சவால் விடுமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபதுக்கு 20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதில் தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி, 15 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது.

அடுத்தபடியாக கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை குவித்தது. இதில் லசித் மலிங்க அற்புதமாக பந்து வீசிய 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

279 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வர 29 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் இப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த்-லூவிஸ் முறையில் 31 ஓட்டத்தினால் வெற்றி பெற்றது. 

இந் நிலையில் இன்று மூன்றாவது போட்டி இடம்பெறவுள்ளது.இப் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்கரரும், அதிரடி துடுப்பாட்டக்காரருமான குசால் ஜனித் பெரோ உபாதை காரணமாக விளையாட மாட்டார். அதேபோன்று உபாதைக்குள்ளான இங்கிலாந்து அணியின் வீரர் லியாம் டாவ்சனும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: