Thursday, October 25, 2018

பெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி

பெண்கள் சம்பியன்ஷிப் தொடரின், ரெட் குழு பிரிவில் நடைபெற்ற முதலாவது போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

இப்போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், நெதர்லாந்தின் கிகி பெர்டன்சை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நீடித்தது. இதில் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் 7-6 என ஸ்லோன் ஸ்டீபன்ஸ் செட்டை கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த கிகி பெர்டன்ஸ், 6-2 என இலகுவாக செட்டை கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது. இதில் ஆரம்பத்தில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். எனினும் தனது ஆக்ரோஷத்தால் கிகி பெர்டன்சை கட்டுப்படுத்திய ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3 என செட்டைக் கைப்பற்றி வெற்றிபெற்றார்.
SHARE:

0 comments: