Thursday, October 18, 2018

மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக்கூட்டணி

விண்ணைத்தாண்டி வருவாயா’, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் – சிம்பு மூன்றாவது முறையாக இணைவதாக அறிவித்திருந்தார்கள்.

“விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகம் மூலம் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருக்கிறார். இதன் மூலம் மூன்றாவது முறையாக இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: