Saturday, October 20, 2018

காதலனுடன் செல்ல அடம்பிடித்த திருமணமான பெண்: பொலிஸாருக்கு அதிர்ச்சி!

இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே இதம்பாடல் என்ற பகுதியை சேர்ந்த முருகேசன், இவர் 8 வருடங்களுக்கு முன்பாக, பிரியா (வயது 29) என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

பிரியாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 27) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஓகஸ்ட் மாதம் 10-ஆம்திகதிஇருவரும் மாயமானார்கள். இது தொடர்பாக, ஏர்வாடி பொலிஸ் நிலையத்தில், முருகேசன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

தவிரவும், மதுரை உய்ரநீதிமன்றத்தில், ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார், முருகேசன். அதன் பேரில், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சத்யபிரியா தலைமையில், தனிப்படை அமைத்து பிரியாவைத் தேடி வந்தது.

இந்த நிலையில், பிரியா கோவை பொள்ளாச்சியில், உள்ள கோட்டூரில், தன் கள்ளக் காதலனுடன் தங்கியிருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற பொலிஸார், பிரியாவை மட்டும் மீட்டு, ஏர்வாடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ஆனால், பிரியா, தான் கள்ளக் காதலனுடன் தான் வாழ்வேன், என்று அடம் பிடித்தார். இதனால் பொலிஸார் திகைத்தனர். அவரை மதுரை காப்பகத்தில் சேர்த்தனர். பிரியாவின் கள்ளக் காதலனைத் தேடி வருகின்றனர்.

இதே போல், ஏர்வாடி அருகே, வேளானுாரைச் சேர்ந்தவர் சத்யராஜ். சிங்கப்பூரில் வேலை செய்கிறார். இவரது மனைவி லிங்கக்கனியையும் காணவில்லை, என்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் கள்ளக் காதல் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
SHARE:

0 comments: