Thursday, October 25, 2018

ஜப்பான் பிரதமர் சீனாவுக்கு விஜயம்!

சீன-ஜப்பான் உத்தியோகபூர்வ இருதரப்பு மாநாட்டை முன்னெடுப்பதற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக உறவு முறிவுக்குட்பட்டதிலிருந்து ஆசிய நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவைப் பேண சீனா உட்பட அனைத்து ஆசிய நாடுகளும் எண்ணுகின்றன.

இந்நிலையில், பாரிய கப்பல் வசதிகளைக் கொண்டுள்ள மிகப் பெரிய ஏற்றுமதி வர்த்தக சக்தியுடைய சீனாவுடன் சீரான வர்த்தக உறவை மேற்கொள்ளும் முகமாகவே, ஜப்பான் பிரதமர் சீனாவிற்கு பயணித்துள்ளார்.

எனினும், அமெரிக்காவுடன் இணைந்த இராணுவ அணிநடை, பாதுகாப்பு பயிற்சி போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சீனாவுடன் உறவை பேணும் இக்கட்டான சூழ்நிலைக்குள் ஜப்பான் சிக்குண்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் ஜப்பான் பிரதமர் சந்திக்கவுள்ள முழுமையான வர்த்தக நோக்கமுடைய மாநாடு முதல் முதலில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: