Thursday, October 25, 2018

ஈராக்கின் 1/3 பங்கு அமைச்சர்களின் தெரிவு நவம்பரில் நடைபெறும்!

ஈராக்கின் உள்துறை அமைச்சு உட்பட ஏனைய 8 அமைச்சுக்களுக்கான அமைச்சர்களின் தெரிவு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

புதிய ஜனாதிபதி அதெல் அப்துல் மஹ்தி மற்றும் அமைச்சரவையின் மூன்றில் இரண்டு பங்கு தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர்கள் நேற்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளனர்.

சட்டவாக்க அதிகாரிகளின் உடன்பாடற்ற நிலை காரணமாக, அமைச்சரவையின் 22 அமைச்சுப்பொறுப்புக்களில் 8 அமைச்சர்களுக்கான தெரிவு இடம்பெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஏனைய 8 அமைச்சுக்களுக்காக அமைச்சர்களைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 14 அமைச்சர்களில், தமார் கத்பன் எண்ணெய் அமைச்சராகவும், ஃபுவாத் ஹுஸைன் நிதியமைச்சராகவும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: