Monday, October 29, 2018

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவுக்கு ஏழு வருட சிறை!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், எதிர்கட்சித் தலைவருமான காலிதா ஷியாவுக்கு மேலதிகமாக 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அத்துடன், 31.5 மில்லியனன் டாகா ($375,000) நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புபட்டமையால் குற்றம் நிரூபிக்கப்பட்டமையை அடுத்து மேலதிக சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவைகளாக இருப்பதாக ஆதரவாளர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

ஒரு தொண்டு சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் காளிதா ஷியா குற்றவாளியென டாக்கா நீதிமன்றத்தின் நீதிபதி தீர்பளித்துள்ளார்.

ஏற்கனவே, அவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கான ஒதுக்கீட்டை மோசடி செய்த குற்றத்திற்காக கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்ட 5 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE:

0 comments: