Sunday, October 28, 2018

தேசிய இளைஞர் விளையாட்டு விழா - யாழ் இளைஞன் - வவுனியா வீராங்கனை சாதனை

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 25.10.2018 அன்று மாத்தறை கொட்டவிலவில் அமைந்துள்ள மாத்தறை மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இதனை கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்தி வருகின்றது.

இதில் மரதன் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கேமப்பிரியா சாதனை படைத்துள்ளார்.

அதேவேளை வட தமிழீழம் யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த நாகேந்திரன் நிதுஜன் அவர்கள் உயரம் பாய்தல் போட்டியில் 3 ம் இடத்தினையும் நீளம் பாய்தல் போட்டியில் 2 ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர்கள் இருவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் - வாசகர்களாகிய நீங்களும் கீழ் கமெண்ட் இல் கருத்தை பதிவிடலாம்.
SHARE:

0 comments: