Sunday, November 4, 2018

இத்தாலியில் பெருவௌ்ளம் – 12 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் ஏற்பட்ட பெரும் வௌ்ளம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 

சிசிலி தீவில் கடந்த வாரம் முதல் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இருவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மாலை நேரம் பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய ஆறு ஒன்றின் கரைகள் உடைந்து வௌ்ளம் பெருக்கெடுத்ததாலேயே வீடொன்றினுள் இருந்த அந்த குடும்பத்தினர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒன்று, மூன்று மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே கார் ஒன்றினுள் சிக்குண்ட நபரும் வெள்ளப் பெருக்கால் உயிரிழந்ததுடன், 2 பேரை காணவில்லை என இத்தாலி ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
SHARE:

0 comments: