Sunday, November 4, 2018

ஆஸியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது.

பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும், தென்னாபிரிக்கா அணிக்கு டு பிளெஸிசும் தலைமை தங்கியிருந்தனர்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி அணி ஆரம்பமே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஒரு கட்டத்தில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆஸி அணி தடுமாறிய போது அலெக்ஸ் கேரி வலுப்படுத்தினார். இருப்பினும் அவர் 33 ஆட்டமிழக்க மீண்டும் அவுஸ்ரேலிய அணி பின்னடைவை சந்தித்தது.

தொடர்ந்தும் விக்கெட்கள் ஒரு புறம் சாய, ஒரு கட்டத்தில் அந்த அணியால் 152 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. அணி சார்பில் நாதன் கொல்டர்-நைல் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் ஆண்டில் பெஹல்குவே 3 விக்கெட்களை வீழ்த்த டேல் ஸ்டெயின், லுங்கி நேகிட மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில், 153 என்ற இலகு வெற்றி இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

அதன் படி 29.2 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்கா அணி 153 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. அந்த அணி சார்பில் குயின்டன் டீ கொக் 47 ஓட்டங்களையும், ரீஸா ஹெண்டிரிக்ஸ் 44, ஐடின் மார்கரம் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் மார்கஸ் ஸ்ட்னிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலை வகிக்கின்றது.


SHARE:

0 comments: