Sunday, November 11, 2018

அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் – ஐ.சி.சி. காலக்கெடு!

இலங்கை அணியில் சகலதுறை வீரர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரை 14 நாட்களுக்குள் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த சோதனையின் முடிவுகள் வரும் வரையில் அவரை பந்துவீச அனுமதிக்க முடியும் எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
SHARE:

0 comments: