Monday, November 5, 2018

சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என மஹிந்த அணி எச்சரிக்கை

ஜனாதிபதியின் உத்தரவினையும் மீறி நாடாளுமன்றதைக் கூட்டினால், சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என, முன்னாள் சபாநாயகர் W.J.M லொக்குபண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த அரசங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை அரசியலமைப்பிற்கு உட்பட்டே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார்.

ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறிவிட்டார் என்று கூறும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

வர்த்தமானி அறிவித்தலையும் மீறி நாடாளுமன்றத்தைத் சபாநாயகர் திறந்தால் சிறப்புரிமைச் சட்டத்திற்கு அமைய அவர் சிறைக்குச் செல்ல நேரிடும்.

பொய்யான ஒரு சாவியினைக் கொண்டு நாடாளுமன்றத்தைத் திறக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.
SHARE:

0 comments: