Monday, November 5, 2018

இலங்கை ஆடுகளம் குறித்து அச்சமடையத்தேவையில்லை – ஜோ ரூட்

இலங்கையின் ஆடுகளங்கள் குறித்து அச்சமடையத்தேவையில்லை என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஜோரூட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை துணிச்சலுடன் அணுகுமாறு அணி வீரர்களிடம் நான் கோரியுள்ளேன்.

நாங்கள் துணிச்சலுடன் இருக்கவேண்டும் சில விடயங்களை வித்தியாசமாக செய்யவேண்டும், நாங்கள் தைரியத்தை வெளிப்படுத்தவேண்டும் சிறிது ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

நாங்கள் கடந்த காலங்களில் முயற்சி செய்யாத ஆபத்தான சில விடயங்களை முயன்றாலே இலங்கையில் வெற்றி சாத்தியம்.

நான் அவ்வாறு விளையாடுவது குறித்து அச்சப்படவில்லை, எனது அணி வீரர்களும் அது குறித்து அச்சப்படுபவர்களில்லை.

இலங்கையின் ஆடுகளங்கள் குறித்து நாங்கள பயப்படவில்லை. பந்து சுழல்வது குறித்து அச்சப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மூன்று சுழற்பந்து வீச்சாளா்கள் விளையாடுவார்கள் ஸ்டுவார்ட் புரோட் விளையாட மாட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்களை வீழ்த்திய ஒருவரை அணியிலிருந்து நீக்குவது கடினம்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
SHARE:

0 comments: